மும்பை: . டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. மும்பை டெஸ்டில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. டெஸ்ட் போட்டி தரத்தில் இந்தியா உலக சாதனை படைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார். இன்று ( 6ம் தேதி ) இந்தியா, இலங்கை அணிகள் மோதிய 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 393 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 726 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் ஆட்ட துவக்கம் முதலே சரிய துவங்கின. இறுதியாக இலங்கை தனது 2வது இன்னிங்சில் 309 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சங்ககரா 137 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்த டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்று, தொடரை வென்று சாதனை புரிந்துள்ளது. ஆட்ட நாயகனாக சேவாக் : அதிகமாக ரன்குவித்த சேவாக் ( 293 ரன்கள் ) ஆட்ட நாயகனாகவும், தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முத்தையா முரளிதரனுக்கு பந்துவீச்சாளர் விருது வழங்கப்பட்டது. குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்த ஜோடியாக சேவாக்-டிராவிட் ஜோடி தேர்வு செய்யப்பட்டது. இலங்கை அணி உடனான 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2-0 என்ற புள்ளியில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 77 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச அளவிலான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 124 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 122 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன. கனவு நனவானது என்கிறார் தோனி : "நம்பர்-1' இடம் பெற்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கடந்த 18 மாதங்களாக முதலிடம் பிடிக்கும் நோக்கத்துடன் சிறப்பாக விளையாடினோம். அணியின் கூட்டு முயற்சியால் இலக்கை எட்டியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க உள்ளோம். இதனால் முதலிடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம். சச்சின் பேட்டி : இந்தியா முதன்முறையாக உலக தர வரிசையில் முதலிடம் பிடித்திருப்பது குறித்து சச்சின் கூறுகையில் இந்த வெற்றிக்காக நாங்களும் , ரசிகர்களும் நீண்ட நாட்கள் காத்திருந்தோம். இந்த வெற்றிக்கு பயிற்சியாளரின் அறிவுரையும் காரணம் என்றார். ஜனாதிபதி பாராட்டு : டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர், தனது பாராட்டு செய்தியில்,""முதலிடம் பெற தகுதிவாய்ந்த அணியாக திகழ்கிறது. இது இந்திய வீரர்களின் திறமையை பிரதிபலிக்கிறது,'' என குறிப்பிட்டுள்ளார். கங்குலி, கும்ளேக்கு பங்கு: கவாஸ்கர்: முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் எழுச்சியில் முன்னாள் வீரர்களான கங்குலி, கும்ளேக்கு பங்கு உண்டு. போராடும் குணத்தை இவர்களிடம் இருந்து தான் சக வீரர்கள் கற்று தேர்ந்தனர். முதலிடத்தை தக்க வைக்க வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
Read more
Tuesday, December 15, 2009
Tuesday, December 8, 2009
சுவிஸ் வங்கி கறுப்பு பணம்
சுவிஸ் வங்கிகளில் புதையலாக குவிந்துள்ள கறுப்புப் பணம் முன்பு எப்போதும் இல்லாத அளவில், இந்த தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு முக்கிய அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது.
"கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கவில்லை' என்று பா.ஜ., தலைவர் அத்வானியும், "மத்தியில் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது அதை செய்திருக்கலாமே' என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த தேர்தலில் இப்பிரச்னையை முதலில் முன்வைக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு அத்வானி கடந்த மார்ச் 29ம் தேதி ஏற்பாடு செய்தார். அப்போது இது குறித்து தெரிவித்த அவர், ""சுவிஸ் வங்கியில் குவிந்துள்ள கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தை இந்தியா கொண்டு வந்தால் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தலாம். கறுப்புப்பணத்தை கொண்டுவர முயற்சி செய்யாத காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் தண்டிக்க வேண்டும். பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தால் இப்பணத்தை இந்தியா கொண்டு வர முயற்சி செய்வோம்,'' என்று கூறியிருந்தார்.
வருமான கணக்குக் காட்டுவதிலிருந்து தப்பிக்கவும், வரி மோசடி செய்வதற்காகவும் ஏராளமானோர் கறுப்புப்பணத்தை சுவிஸ் வங்கிகளில் முறைகேடாக முதலீடு செய்துள்ளனர்.
குற்றவாளிகளின் பணம்: இதுதவிர கொலை, கொள்ளை, பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளோரின் பணமும் இங்கு குவிந்துள்ளது. இதன் மதிப்பு தற்போது ரூ.25 லட்சம் கோடியிலிருந்து ரூ.75 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சுவிட்சர் லாந்தில், 408 வங்கிகள் உள்ளன. இவ்வங்கிகளுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இவற்றில் யு.பி.எஸ். ஏ.ஜி., மற்றும் கிரடிட் சுசே என்ற இரு வங்கிகள்தான் பெரியவை. அந்நாட்டின் சட்டப்பட்டி சுவிஸ் வங்கிகளில் உள்ள கணக்குகள் பரம ரகசியமானது. கணக்கு வைத்திருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த தகவலும் அளிக்கப்படுவதில்லை.
இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்களின் கணக்குகளை வங்கியிலிருந்து பெற்று அவர்களை அழிக்கும் முயற்சியில் ஜெர்மனியின் ஹிட்லர் ஈடுபட்டதால், வங்கிக் கணக்குகளை ரகசியம் ஆக்கும் சட்டத்தை 1934ம் ஆண்டு சுவிஸ் வங்கி கொண்டு வந்தது. அப்போது முதல் இன்று வரை, இந்த சட்டத்தின் படி கணக்கு வைத்திருப்பவரைத் தவிர, அவர் சார்ந்திருக்கும் நாடு அல்லது புலனாய்வு நிறுவனங்கள் கேட்டால்கூட தருவதில்லை.
எண் அடிப்படையில் கணக்கு: சுவிஸ் வங்கிகளில் சிலருக்கு வங்கிக் கணக்கு பெயர் அடிப்படையில் அல்லாமல் எண் அடிப்படையில் வழங்கப்படும். அந்த எண்ணுக்கு உரியவரின் பெயரை கண்டுபிடிக்க வங்கியின் உயர் அதிகாரிகளால்தான் முடியும். ஆகவே வெறும் எண்ணை வைத்தே கணக்குகளை இயக்கி வருவோரும் உண்டு.
இந்தியாவில் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர், ஒருவேளை சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் கூட, அந்த ரகசியம் யாருக்கும் தெரியாது என்பதால் அதை எளிதாக மறைத்துவிடும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற நடைமுறைகள் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்குகிறது என்று பெரும்பாலான நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சுவிஸ் வங்கி கணக்குகளை வழங்கும்படி சுவிட்சர்லாந்து அரசிடம் அமெரிக்கா கேட்டது. வரி ஏய்ப்பிலிருந்து தப்பியவர்களை இதன்மூலம் எளிதில் மடக்கி வரி வசூலிக்க வேண்டும் என்பது அந்நாட்டின் திட்டம். இதே போன்று ஜெர்மனியும் கேட்டிருந்தது.
20 ஆயிரம் அமெரிக்கர்களின் ரகசிய கணக்குகளையும், 1400 ஜெர்மனியர் களின் ரகசிய கணக்குகளையும் சுவிஸ் அரசு அந்நாடுகளிடம் அளித்துள்ளது.
ஜெர்மனியின் பட்டியலில் 600 பேர்தான் அந்நாட்டை சேர்ந்தவர்கள். அந்த பட்டியலில் இந்தியர்களின் பெயர்களும் இருப்பதாகவும், இந்தியா கேட்டால் தரத்தயார் என்றும் அந்நாடு கூறியிருக்கிறது.
அத்வானி கருத்து: இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அத்வானி, "ஜெர்மனியிடம் இந்தியர்களின் பெயர்களை கேட்க மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியும் கூட, நடவடிக்கை எடுக்கவில்லை' என்றார்.
கடந்த ஓராண்டாகத்தான் கறுப்புப் பண விவகாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக் காவும் ஜெர்மனியும் முனைப்புக் காட்டும் இச்சமயத்தில்தான் மத்திய அரசு விழிப்பாக இருந்திருக்க வேண்டும்.
கடந்த ஏப்ரல் 2ல் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க லண்டன் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக அங்கு நடந்த பேச்சு வார்த்தையில் மவுனம் சாதித்தார் என்றும் பா.ஜ., குற்றம்சாட்டுகிறது. இந்தியப் பணம் மீண்டும் இந்தியாவுக்கே கொண்டுவரப்படுமானால், ஏறத்தாழ ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு இந்தியாவுக்கு வரி வருவாய் கிடைக்கும். இந்த பணத்தை கொண்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் சுகாதாரமான குடிநீர், பள்ளிக்கூடங்கள், இன்டர்நெட் இணைப்பு வசதி கூட செய்து தர முடியும் என்றும் கூறப்படுகிறது.
கறுப்புப் பணத்தின் புதையலாக காட்சி அளிக்கும் இந்த பணத்தை கொண்டு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இந்த கறுப்புப்பணம் இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும், குற்றச்செயல்களை தூண்டவும், பங்கு சந்தையை முடமாக்கவும்தான் பயன்படுகிறது என்ற அத்வானியின் கருத்து இத்தேர்தலில் முக்கிய இடம் பெற்றுவிட்டது.
இந்த பெயர்கள் வெளியானால் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பலரின் முகத்திரை கிழியும். நல்லவர்களாக நடிக்கும் பலரது வேஷம் கலையும். வி.ஐ.பி.,கள் குற்றவாளிகள் ஆவார்கள்.

எந்த நாடு அதிகம்...
இந்தியா - ரூ.75 லட்சம் கோடி
ரஷ்யா - ரூ.25 லட்சம் கோடி
பிரிட்டன் - ரூ.20 லட்சம் கோடி
உக்ரைன் - ரூ.5லட்சம் கோடி
சீனா - ரூ. 4.8 லட்சம் கோடி
இந்தியா - ரூ.75 லட்சம் கோடி
ரஷ்யா - ரூ.25 லட்சம் கோடி
பிரிட்டன் - ரூ.20 லட்சம் கோடி
உக்ரைன் - ரூ.5லட்சம் கோடி
சீனா - ரூ. 4.8 லட்சம் கோடி
பிராந்திய மொழிகளில் மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் தன் வர்த்தகம் என்றும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் எனவே எண்ணுகிறது. மைக்ரோசாப்ட் இந்தியா என்னும் இந்திய மைக்ரோசாப்ட் பிரிவு அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அண்மையில் இதன் ஹைதராபாத் ஆய்வுக் கூடம் , மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்களில் பிராந்திய மொழிகளில் தகவல் உள்ளீடு செய்வதற்கான டூல்ஸ் ஒன்றைத் தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த டூல் மூலம், இந்திய மொழி ஒன்றின் டெக்ஸ்ட்டை, ஆங்கில எழுத்துக்களின் ஒலிப் பின்னணியில் அமைக்கலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் சிஸ்டங்கள் மற்றும் சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்திலும் இதனை அமைக்கலாம். முதல் கட்டமாக தமிழ், இந்தி, கன்னடா, வங்காளம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான டூல் தரப்படுகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்னால், ஜப்பானிய மொழியில் தன் அனைத்து சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்தது. தொடர்ந்து தான் இலக்கு வைத்திடும் நாடுகளில் இந்த கூடுதல் வசதிகளைத் தந்த மைக்ரோசாப்ட், தற்போது இந்திய மொழிகளில் தன் கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்தியாவில் 1.2 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர் பயனாளர்களும், 4.5 கோடி இன்டர்நெட் பயன்படுத்துபவர்களும், 52.5 மொபைல் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். இத்தகைய பிராந்திய மொழிகளில் டூல்ஸ்களை வழங்குவதன் மூலம், வாடிக்கையாளர்களைத் தன் பக்கமே வைத்திருக்க முடியும் என மைக்ரோசாப்ட் நினைக்கிறது. டெஸ்க்டாப் அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய அப்ளிகேஷன்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த டூல்ஸ் அமையும் என்று அறிவித்துள்ளது. இவற்றின் சோதனைத் தொகுப்பினை விரைவில் தன் இணைய தளத்தில் மைக்ரோசாப்ட் தர இருக்கிறது.

முதல் ஆப்டிகல் ட்ராக்பால் கீ போர்ட்
ஆம்கெட் (Amkette) நிறுவனம், புதிய வயர்லெஸ் ஆப்டிகல் ட்ராக் பால் கொண்ட கீ போர்டு ஒன்றை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ.2,995 என விலை குறிக்கப்பட்டிருக்கும் இந்த கீ போர்டு, இவ்வகையில் தயாரிக்கப்பட்ட முதல் கீ போர்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடனும், மேக் மற்றும் லினக்ஸ் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.
இதில் உள்ள 800 டி.பி.ஐ. ஆப்டிகல் ட்ராக் பால் 360 டிகிரி சுற்றி இயங்கக் கூடியது. இது ஒரு வழக்கமான மவுஸ் போலவே செயல்படுகிறது. இந்த கீ போர்டு 365 மிமீது 156 மிமீ து 22 மிமீ, என்ற அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை எளிதாக எங்கும் எடுத்துச் செல்லலாம். நான்கு நிமிடங்கள் இதனை இயக்காமல் இருந்தால், உடனே மின் சக்தி நிறுத்தப்படும் வகையில் இதில் வழி செய்யப்பட்டுள்ளது.
இதன் ஆப்டிகல் ட்ரேக் பாலில் ஒரு ஸ்குரோல் வீல் மற்றும் இரண்டு செட் வலது மற்றும் இடது பட்டன்கள் தரப்பட்டுள்ளன. மேற் புறத்தில் பத்து மல்ட்டி மீடியா கீகள் தரப்பட்டு இன்டர்நெட் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற வற்றை இயக்குவதை எளிதாக்கு கின்றன. பெர்சனல் கம்ப்யூட்டர் களில் ஹோம் தியேட்டர் செட் செய்பவர்களுக்கு இந்த கீ போர்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இணைய வேகம் சரிதானா?
பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் கண்டிஷன்களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம். உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின்http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.
அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.
USB டிரைவில் குரோம் O.S.
குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை. இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent)தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன. Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது. நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால், http://carbon.hexxeh.net/chromiumos/ என்ற முகவரியில் கிடைக்கும், பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பச்சைப் பாசி'யில் பவர்புல் பேட்டரிகள்
மின்சாரத்தை சேமித்து வைத்து, தேவைப்படும் போது அதை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை பேட்டரிகள் தருகின்றன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாலிமர், லித்தியம் பேட்டரிகளுக்கு பதிலாக "அல்கே' (பச்சை பாசி) மூலம் பேட்டரிகள் தயாரிக்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தண்ணீரில் வளரக்கூடிய, முடி போன்ற இழைகளாலான இந்த பாசிகள், பார்ப்பதற்கு அருவருப்பாகவும், நாற்றம் கொண்டதாகவும் இருக்கும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள பேட்டரிகள் அளவில் பெரியதாகவும், எடை அதிகம் கொண்டதாகவும் உள்ளன. மேலும், இந்த பேட்டரிகளின் பயன்பாடு குறிப்பிட்ட கால அளவிற்குள் தான் உள்ளன. அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதனால், இவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்காத, மெல்லிய, எடை குறைவான, உலோகம் இல்லாத, வளையக்கூடிய, விலை குறைந்த, எளிதாக பயன்படுத்தும் வகையிலான பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இம்முயற்சியில் விஞ்ஞானிகள் தற்போது வெற்றியும் பெற்றுள்ளனர். சாதாரணமான "கிளடோபோரா' என்ற பச்சை பாசியை கொண்டு பேட்டரி தயாரிக்கும் ஆராய்ச்சி பலன் அளித்துள்ளது.காகிதத்தை விட 100 மடங்கு செலுலோஸ் அதிகம் கொண்டதாக இந்த தாவரம் உள்ளது. மின்சாரத்தை சேமிக்கவும், வெளியேற்றவும் தேவையான ஆற்றல், பாசிக்கு உள்ளது.
"சுற்றுச்சூழல் பாதிக்காத, விலை, எடை குறைந்த, பெரிய அளவில் மின் சேமிப்பு முறையை பாசியை கொண்டு தயாரிக்க முடியும்' என, சுவீடனை சேர்ந்த உப்சாலா பல்கலைக்கழக நானோ தொழில்நுட்ப வல்லுனர் மரியா ஸ்ரோமி கூறியுள்ளார். தற்போதுள்ள பாலிமர் பேட்டரிகளை ஒப்பிடும் போது, பாசியை கொண்டு தயாரிக்கும் பேட்டரி 40 முதல் 50 நானோ மீட்டர் அளவு சிறியதாக இருக்கும். காகிதத்திற்குள் வைக்கப்படும் பச்சை பாசியின் தடிப்பு 20 முதல் 30 நானோ மீட்டர் அளவு மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிமர் பேட்டரிகளை விட 50 முதல் 200 சதவீதம் அதிகமாக இந்த புதிய பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும். சாதாரண பேட்டரிகளில் ஒரு மணி நேரத்தில் ரீசார்ஜ் செய்யும் மின்சாரத்தை புதிய பேட்டரிகள் 11 வினாடி முதல் 8 நிமிடங்களுக்குள் ரீசார்ஜ் செய்து விடும். ரீசார்ஜ் பேட்டரிகளை பயன்படுத்துபவர்களுக்கு புதிய பேட்டரிகள் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பாலிமர் பேட்டரிகளில் 60 முறை ரீசார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யும் போது 50 சதவீதம் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், புதிய பேட்டரிகளில் 100 முறை சார்ஜ் செய்தாலும், 6 சதவீத இழப்பே ஏற்படும்.

Subscribe to:
Posts (Atom)